Mon. Feb 10th, 2025

ஜனாதிபதி தேர்தலே முதலில்!! -அடித்து கூறுகிறார் மஹிந்த தேசப்ரிய-

நாட்டின் இப்போதைய களநிலவரத்தின்படி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு நீதிமன்றத்திலிருந்து உத்தரவொன்று கிடைக்க பெற்றால் அதனை நடத்தவேண்டி நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்த கூடிய சட்டம் என்ன என்பது தொடர்பிலான உரிய தீர்வு இன்னும் கிடைக்க பெறவில்லை.

அதன் காரணமாக அதனை நடத்த முடியாது என்றே கூற வேண்டியுள்ளது.

எனினும் அதனை நடத்துமாறு உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல்களை நடத்தியே ஆக வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்