ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனியாக போட்டி!!
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தன்னை போன்றோர் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருப்பதால் எமது கட்சி சிறந்த நிலையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
கூட்டணி இல்லாமல் வெற்றிப் பெற முடியும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும் என தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கூறுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.
மற்றைய சிறிய கட்சிகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.