ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான திட்டத்தை சஜித் வெளிப்படுத்த கோரி- ரணில் நிபந்தனை விதிப்பு
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தனது அரசியல் மற்றும் பிரச்சார திடத்தை முன்வைக்குமாறு பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசரிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.
செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இரண்டு மணிநேர பேச்சுவார்த்தையின் போதே இதனை பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, தனித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒரு கட்சியாக வெல்ல முடியாது, எனவே கூட்டணி கட்சிகள் மற்றும் தமிழ் கூட்டமைப்பு ஆகியோரின்
ஆதரவையும் பெற முடியுமா என்று திரு பிரேமதாசரிடம் கேள்வியெழுப்பியுள்ளார் . இந்த கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பாக சஜித், தனது கொள்கைகளையும் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜிதா சேனரத்ன அமைச்சர் சஜித்துக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்டுள்ளார்