Thu. Oct 3rd, 2024

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக பிரதமருக்கு அழைப்பு!!

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அரச நிறுவனங்களின் மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் செப்டெம்பர் 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது தொலைநகல் மூலமாக அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

விவசாய அமைச்சகத்தில் உள்ள விவசாய மாளிகையை கையகப்படுத்த பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை ஆய்வறிக்கை குறித்தும், ராஜகிரியாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் விவசாய அமைச்சகத்தை நிறுவுவது தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து ஆதாரங்கள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்