ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க ஐக்கிய தேசிய கட்சி முயற்சி?

ஜனாதிபதி தேர்தல் இடமபெறுவதை தடுப்பதற்காக, அதனை ஒழிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட்ட ஐக்கியதேசிய கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் முயன்று வருகின்றார்கள் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியினர் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க ஒத்துழைப்பு கோருகிறார்கள். இதன்மூலம் ஜனதிபதி தேர்தலை பின்போடவோ அல்லது முற்றாக தடைசெய்யவோ முயற்சிப்பதன் மூலம் தங்களின் இயலாமையை மறைக்க முயல்கிறார்கள் என்று அவர் குற்றம் சுமத்தினார்.
இவர்கள் கடந்த 5 வருடமாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க குயற்சிக்காமல் தற்பொழுது முயல்வதன் மூலம் எல்லாவற்றையும் பின்போட திட்டம் போடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தினர்