Mon. May 18th, 2026

ஜனாதிபதியை கொலைசெய்ய திட்டம் தீட்டிய 5 மரண தண்டனை கைதிகளிடம் வாக்குமூலம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்ய திட்டம் தீட்டியதற்காக சிறையில் உள்ள 5 சிறைக்கைதிகளையும் விசாரணை செய்து வாக்குமூலம் பெறுமாறு குற்ற புலனாய்வு திணைக்களத்தை கொழும்பு கோட்டை நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
நான்கு வெலிக்கடை சிறைச்சாலை மரண தண்டனை கைதிகளும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்த மற்றுமொரு மரணதண்டனை கைதியும் ஜனாதிபதியை கொலைசெய்வதற்கு திட்டம் தீட்டியதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்தே நீதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.
இந்த வாக்குமூலம் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கும் இடையில் எடுக்கப்படவேண்டும் என்றும் சிறைச்சாலை பொறுப்பாளருக்கு நீதிபதி உத்தரவு இட்டுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed