ஜனாதிபதியுடன் புதன்கிழமை கலந்துரையாடவுள்ள கூட்டமைப்பு

மீள் குடியேற்றம் , காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள் போன்ற பலவிடயங்களை புதன்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெறும் சந்திப்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை மறுதினம் இந்த சந்திப்பு காலை 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்