ஜனாதிபதியுடனான சந்திப்பு தோல்வி -கூட்டமைப்பு
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தமிழ்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் உட்பட்ட பல விடயங்கள் தொடர்ப்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இன்று முற்பகல் ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற் உறுப்பினர்கள் இதனை தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்தோர் பிரச்சினை, காணி அபகரிப்பு மற்றும் விடுவிப்பு, பௌத்த விகாரைகள் அமைப்பு போன்ற பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற இருந்த நிலையில் ஒரு சில விடயங்கள் மாத்திரமே இறுதியில் கலந்துரையாடப்பட்டதாகவும் , அதிலும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூட்டமைப்பு நாடுளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டார்கள்