சோடா அருந்தியவர் உயிரிழப்பு
மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி விட்டு சோடா பருகிய நிலையில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் சங்கானை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரராசா ரசிந்தன் (வயது 34 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த உணவகத்தில் உணவருந்தி விட்டு சோடா குடித்துள்ளார். இந்நிலையில் மயக்கமேற்பட்டவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வைத்தியசாலைக்கு வருகை தருவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவர் இறந்ததற்கான காரணம் கண்டறியப்படாததையடுத்து மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன.