சொந்த காணியை பொது மக்களுக்கு பகிர்ந்தளித்த ஆனந்தசங்கரி!!
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனது சொந்த காணியை காணியில்லாமல் இருந்த பொது மக்களிடம் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பகிர்ந்தளித்துள்ளார்.
குறித்த காணிகளை மக்களிடம் ஒப்படைக்குமாறு உத்தியோக பூர்வ ஆவணத்தை அவர் இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தார்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனும் உடனிருந்தார்.