Sun. Sep 8th, 2024

சேற்றில் புதைந்து மயக்கமடைந்த தாய் மற்றும் இரு பிள்ளைகள், மீட்டெடுத்த இராணுவம்.

பூநகாியில் குளம் ஒன்றில் குளிக்க சென்றபோது சேற்றில் புதையுண்டு மயக்கமடைந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளை இராணுவத்தினா் மீட்டுள்ளனா்.

கிளிநொச்சி பூநகரி நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களே சேற்றில் புதையுண்டுள்ளனர். சேற்றில் புதையுண்டு மயக்கமடைந்திருந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளும்

காப்பாற்றப்பட்டு பூநகரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்