சேறும் சகதியுமாக காணப்படும் அல்வாய் மாநாண்டி சந்தை சந்தையைப் புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேறும் சகதியுமாக காணப்படும் அல்வாய் மாநாண்டி சந்தை சந்தையைப் புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாநாண்டி சந்தை அண்மையில் புதிதாக கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சந்தைக்குச் செல்லும் வழிகள் சேறும் சகதியுமாக காணப்படுவதால் சந்தை வியாபாரிகள் தமது பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுவதோடு பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு தமது துவிச்சக்கர வண்டியைக் கூட கொண்டு செல்ல முடியாது இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பலமுறை பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நகர சபைக்கு அறிவித்தும் எதுவித பலனும் கிடைக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


சந்தைக்கு உள்நுளையும் அனைத்து இடங்களுமே சகதி நிறைந்ததாக இருப்பதால் முதியவர்கள் வழுக்கி விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து புனரமைப்பு செய்து தருமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.