சேர் ஜோன் காபற் கனிஸ்ட மெய்வல்லுநர் போட்டி மானிப்பாய் இந்துக் கல்லூரி அசத்தல்
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் (Sir john tarbat junior championship 2019)நடாத்தும் இளையோர் தகுதிகான் மெய்வல்லுனர் போட்டியில்
மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்கள் தமது அபார திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடாத்தும் சேர் ஜோன் காபற் கனிஸ்ட பிரிவினருக்கான மெய்வல்லுநர் போட்டிகள் நேற்றும் இன்றும் வெனப்புவ அல்பிரட் சீரிஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மானிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த V.சிந்துஜன் 15 வயதின் கீழ் பிரிவில் 400M ஓட்டத்தினை 58.1வினாடிகளில் ஓடி வர்ணசான்றிதலையும்(Merit) 800M ஓட்டத்தினை 2:18.1 வினாடிகளில் ஓடி வர்ணசான்றிதலையும் பெற்றுள்ளார்.
14 வயதின் கீழ்பிரிவில் T.தர்ஷன் குண்டுபோடுதலில் 9.90M எறிந்து வர்ணசான்றிதலையும் தட்டெறிதலில் 24.50M எறிந்து வர்ணசான்றிதலையும் பெற்றுள்ளார்கள்
15 வயதின் கீழ் பிரிவு ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் J.பிரவீன் 33.80M எறிந்து வர்ணசான்றிதலையும்
13வயதின் கீழ்பிரிவில்N.நிதுஷன் உயரம்பாய்தல் நிகழ்ச்சியி1.28M உயரம் பாய்ந்து வர்ணசான்றிதலையும்
14 வயதின்கீழ்பிரிவு தட்டெறிதலில் R.ஜெறோம் 23.80M தூரம் எறிந்து வர்ணசான்றிதலையும் பெற்றுக்கொண்டனர்
15வயதின் கீழ்பிரிவு ஈட்டிஎறிதலில் S.பவித் 33.95M தூரம் எறிந்து வர்ணசான்றிதலையும் பெற்றுக் கொண்டார்கள்.