செல்வ சந்நிதியில் போக்குவரத்து நெரிசல், ஆலைய நிர்வாகம் கவனத்தில் எடுக்குமா?
இன்று நடைபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி தேர் திருவிழாவுக்கு வந்த பொதுமக்களுக்கு போக்குவரத்து ஒழுங்குபடுத்தலை நிர்வாகம் சரியான முறையில் நடைமுறைபடுத்தவில்லை என்று பக்தர்கள் விசனம் வெளியிட்டார்கள். சரியானமுறையில் ஒழுங்குபடுத்தல் செய்து கொடுக்காததாலும் போதிய அளவு பொலிஸாரை பாதுகாப்புக்கு கடமையில் ஈடுபடுத்தாதலினாலும் பொதுமக்கள் வீதியை கடப்பதற்கும் வாகனங்களில் செல்வதற்கும் வேகு நேரமகாகாவல் நிற்கவேண்டிய நிலையேற்பட்டது. வயது வந்தவர்கள் குழந்தைகளே பெரிதும் இதனால் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இனிவரும் கலங்களில் சரியான முறையில் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் பக்த அடியார்கள் ஆதங்கத்துடன் கோரிக்கை வைக்கிறார்கள்