Tue. Oct 6th, 2026

செல்வச் சந்நிதி உற்சவத்தில் தயிர் உற்பத்தியாளருக்கு தண்டம்

செல்வச் சந்நிதி உற்சவத்தின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் தயிரை உற்பத்தி செய்த உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளருக்கு மல்லாகம் நீதி மன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டதோடு செலுத்தத் தவறின் 48 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கப்படும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

செல்வச் சந்நிதி உற்சவ காலத்தின் போது அச்சுவேலி பகுதி வீதியோரத்தில் வைத்து விற்கப்பட்ட தயிர் தொடர்பில் சுற்றுதுண்டு மற்றும் விளம்பரம் ஒழுங்கு விதிகளை மீறியமை தொடர்பாக அச்சுவேலி பொதுச் சுகாதார பரிசோதகர் சர்மிளன் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தினால் வழக்கு எடுக்கப்பட்ட போது குறித்த தயிர் உற்பத்தியாளருக்கு எதிராகவும் மற்றும் விற்பனை செய்தவருக்கு எதிராகவும் தலா 24 000 ரூபாய் வீதம் இருவருக்கும் மொத்தமாக 48 000 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டது உடன் காசு கட்ட தவறின் 48 மாதங்கள் சிறத்தண்டனையும் அனுபவிக்க கட்டளை வழங்கப்பட்டது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed