செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் நிழற்பிரதி அச்சிடும் இயந்திரம் கையளிப்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு நிழற்பிரதி அச்சிடும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.


உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் வேண்டுகோளுக்கிணங்க

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி.செந்தில்வேல் மேகனதாஸ் அவர்களினால்

4 லட்சம் பெறுமதியான நிழற்பிரதி அச்சிடும் இயந்திரம் கடந்த வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.