செம்மலை நீராவியடி பிள்ளயாரின் லீலை,பௌத்த பிக்கு புற்று நோயால் பலி
முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை தொல்பொருள் திணைக்களத்தின் துணையுடன் அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் .
நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று அவர் உயிரிழந்துள்ளார் .
கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற மேற்குறிப்பிட்ட பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்களுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்த நிலையிலேயே நீண்டகாலமாக புற்று நோய் தாக்கத்திற்கு உட்பட்டு மரணமடைந்துள்ளார்