Sat. Feb 15th, 2025

செப்டெரம்பேர் 6 இல் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு-மீண்டும் குட்டையை குழப்பும் ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் அறிவிப்பு செப்டம்பர் 6 ஆம் தேதி இடம்பெறும் என்று தெரியவருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் 73 வது ஆண்டு விழா செப்டெரம்பேர் 6 ஆம் திகதி நடைபெறுவதால் இதே திகதியிலேயே ஜனாதிபதி வேட்பாளரினதும் அறிவிப்பு இடம்பெறும் என்று பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை மாலத்தீவில் இருந்து திரும்பியவுடன் கட்சியினருடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய மிகவும் பொருத்தமான வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக 73 வது ஆண்டுவிழாவில் அறிவிக்கப்படும். அதன் பின்னரே தேர்தல் பிரச்சாரம் பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் என்று கூறினார் .

ஐ.நா. தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண கவுன்சிலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த முடிவுகள் எடுக்கப்படும்.

இதனிடையே கடந்தவாரம் ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் , கட்சியின் யாப்பின் படி , ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே இடம்பெறும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்