சென்னையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ராஜ்குமார் நடராஜன் , வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களிடம் பணம் பெற்று தப்பி ஒட்டம்

சென்னையில் உள்ள தேவி நகர் ஆளப்பாக்கம் வளசரவாக்கம் பகுதியில் ரெமிஷா சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ( Resmisha Service Appartment ) அதிபர் ராஜ்குமார் நடராஜன் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இவர் மலிவு விலையில் விமானப்பயணசீட்டு பெற்றுத்தருவதாக கூறி பெரும்தொகை பணத்தை பெற்று தப்பி ஓடியுள்ளார். பிரித்தானியாவில் வசிக்கும் பலர் பல்லாயிரக்கணக்கான பணத்தை இவரிடம் இழந்து விடுமுறைக்கு போகமுடியாமல் தவிக்கினறார்கள். இவர் தனது ஹோட்டலையும் பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது . இவரது தாம்பரம் ஆக்ஸிஸ் வங்கி (Axis bank ) கிளையில் உள்ள 911010007864230 என்ற கணக்குக்கே இவர்கள் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்கள்.
மலிவு விலையில் விமான பயணசீட்டு பெறும் நப்பாசை காரணமாக பலர் ஏமாந்து வருகின்றார்கள். கடந்த வருடமும் இதே மாதிரி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழர் ஒருவரும், இனவேறுபாடுகள் இன்றி தமிழ் மற்றும் சிங்களவர்களிடமும் பல லட்சக்கணக்கான டாலர்களை ஏப்பம் விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் நியூஸ் தமிழ்(newsthamil) முகநூல் பக்கத்தினூடாக பகிருவதன் மூலம் பாதிக்கபட்டவர்களுக்கு தகவலை தெரிவிக்கலாம். இந்த செய்தியை முகநூலில் பகிருவதன் மூலம் இவரை கண்டுபிடிப்பதற்கு உங்கள் உதவியை செய்யுங்கள்
Remisha Service Apartments (Alapakkam)
43, Sree devi Nagar,
3rd cross Street, Alapakkam,
Chennai, Tamilnadu, India 600116.



customerservice@remishaserviceapartments.com / rajkumar@remishaserviceapartments.com