செஞ்சோலை படுகொலை: 13 ஆவது நினைவேந்தல்!! -யாழ்.பல்கலையில்-
சிறிலங்கா விமான படையால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட செஞ்சோலை மாணவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்கிழமை காலை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்தது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இவ் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது உயிரிழந்த மாணவிகள் நினைவுகூரப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்த கொண்டு உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினர்.