செஞ்சோலையில் விமான தாக்குதலால் உயிர் இழந்த சிறார்களுக்கு இன்று அஞ்சலி நிகழ்வு
செஞ்சோலையில் விமான தாக்குதலால் உயிர் இழந்த சிறார்களுக்கு இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. விமான தாக்குதல் இடம்பெற்ற நேரத்துக்கே இந்த அஞ்சலி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது. சரியாக காலை 6.05 மணிக்கு ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் 16-18 க்கு இடைபட்ட வயதுடைய 61 பெண் பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது