Thu. Apr 24th, 2025

சுவிட்சர்லாந்து அல்வாய் ஒன்றியத்தின் வலைப்பந்தாட்ட கிண்ணம் திக்கம் வசம்

சுவிட்சர்லாந்து அல்வாய் ஒன்றியத்தின் 08 ஆவது விளையாட்டு விழாவில் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலைசந்தி மைக்கல் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் பேற்றுக்கெய்வோனாக விளையாடிய திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக வீராங்கனை அகல்யா, மனோகரா விளையாட்டுக் கழக வீராங்கனை சாகித்தியா ஆகியோரின் ஆட்டம் அனல் பறந்தது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக அணி 18:15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்