Sun. Nov 15th, 2026

சுற்றுலா துறையின் போக்குகளும் சவால்களும் தொடர்பாக சர்வதேச நாடுகள் பங்குபற்றும் பயிற்சிக்கு பிரதம கணக்காளர் சூடாமணி அகிலன் சிங்கப்பூரிற்கு பயணம்

வடக்கு மாகாண சுற்றுலா நிதி திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதம கணக்காளர் திரு சூடாமணி அகிலன் சுற்றுலா சம்பந்தமாக சர்வதேச பயிற்சி நெறிக்கு சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சிங்கப்பூர் கோப்பரேஷன் நிகழ்ச்சி திட்டத்தின் சுற்றுலா துறையின் போக்குகளும் சவால்களும் தொடர்பாக சர்வதேச நாடுகள் பின்பற்றும் பயிற்சி எதிர்வரும் 26ம் திகதி முதல் 31ம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்கு இலங்கையில் இருந்து பங்குபற்றும் ஒருவராக பிரதம கணக்காளர் சூடாமணி அகிலன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் கணக்காளர் சேவையில் ஏறத்தாழ 19 வருட அனுபவம் உடையவர். 21 வருடங்கள் அரச சேவையை பூர்த்தி செய்துள்ளார். மேலும் 7 வருடங்கள் அகில இலங்கை கணக்காளர் சேவையில் தரம் ஒன்றில் அபிவிருத்தி கூட்டமைப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வளிமண்டலவியல் திணைக்களத்தில் கடமையாற்றி தற்போது வடக்கு மாகாண சுற்றுலா மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பிரதமர் கணக்காளராக பணியாற்றி வருகிறார். 12 வருடங்கள் வடக்கு மாகாண பல்வேறு திணைக்கங்களில் கடமையாற்றியுள்ளார். இவர் கல்வி,கலை விளையாட்டு, சமூக சேவைகள் ஆகிய துறைகளில் பல்துறை ஆற்றல் கொண்டவராக விளங்கி வருகிறார். விளையாட்டு துறையில் கூடைப் பந்தாட்டம் ஆண்களுக்கான வலைப்பந்தாட்டம், கலப்பு வலைப்பந்தாட்டம் ஆகிய துறைகளில் யாழ் மாவட்ட அணியில் தலைவர் உபதலைவர் பதவிகளை வகித்ததுடன் தேசிய மட்ட போட்டிகளில் பல தங்கப் பதங்களை பெற்றும் 2003, 2013, 2015 ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டத்தில் வலைப்பந்தாட்டத்தில் சிறந்த தடுப்பாளர் வீரருக்கான விருது பெற்றவர். மேலும் கூடைப்பந்தாட்டம் வலைப்பந்தாட்டம் ஆகிய துறைகளில் நடுவராகவும் பங்குபற்றினார். இசை, நாடகம், கவிதை துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர் 2020 ஆம் ஆண்டு அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் தேசிய மட்ட நாடகத்திற்கான வெள்ளி விருதுகளை பெற்றவுடன் தேசிய ரீதியில் சிறந்த நாடக நடிகருக்கான விருதினையும் பெற்றுள்ளார்.

 

அரியாலையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஐக்கிய கழகம், மத்திய விளையாட்டு கழகம் சனசமூக நிலையங்களில் பல்வேறு உயர் பதவிகளை வைத்ததுடன் மத்திய விளையாட்டு கழகம் சுதேசியம். ஆகிய அமைப்புகளில் தலைவர் பதவியை வகித்ததுடன் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தில் செயலாளராக பதவி வகித்த இவர் கொடிய யுத்தத்தின் பின் முதன் முதலில் யாழ் மாவட்டத்தில் தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியை நடாத்த முன்னின்று உழைத்தவர். மேலும் இவர் யா/ சென் பெனடிக்ட் றோ.க.த.வித்தியாலயம் மற்றும் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் ஆவார்.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்தில் தொழில் நிர்வாகமாக மனிதவளம் சிறப்பு கற்கை நெறியையும் சிறீஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தில் முதுகலை பொது நிர்வவாகமாணி பூர்த்தி செய்து இலங்கை அபிவிருத்தி நிர்வாக தரத்தில் HNDIPPCA பட்டத்தினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed