சுய கௌரவத்தை விட்டுக் கொடுத்து ரணிலின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ளேன்!! -சஜித் அதிரடி அறிவிப்பு-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான எனக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித்திற்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இருப்பினும் அவ்வாறான நிபந்தனைகள் பற்றி தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. எந்வொரு காரணத்திற்காகவும் நாட்டையோ, கட்சியையோ, ஐக்கிய தேசிய முன்னணியையோ இழிவுபடுத்தும் வகையில் அவற்றின் கௌரவத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயற்படப் போவதில்லை.
தனது சுய கௌரவத்தை விற்பனை செய்து அதன் ஊடாக நலன் பெற்றுக்கொள்ளும் பழக்கம் தமக்கு கிடையாது எனவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபந்தனைகளின் அடிப்படையில் வேட்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் உத்தேசம் எப்பொழுதும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.