Mon. Aug 10th, 2026

சுமந்திரனின் ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும் புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழ் நிலை தொடர்பான கருத்தரங்கு

சிவில் சமூகப் பிரதிநிதிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ம.ஆ.சுமந்திரனின் ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும் புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழ் நிலை தொடர்பான கருத்தரங்கு 29/2/2020  சனிக்கிழமை பிற்பகல் 2.59 மணிக்கு  யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது

இந்த நிகழ்வில் அரசியல் ஆர்வலர் சு. மோகன்ராஜ் வரவேற்புரையினையும் அரசியல் விமர்சன பத்தியாளர் பு.தங்கமயில் தொடக்கவுரையிணையும் பொறியியலாளர் எந்திரி ம.சூரியசேகரம் முழங்காவில் பங்குத்தந்தை அருட்திரு சி.ஜீ.ஜெயக்குமார் மூத்த ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ரி.கணேசலிங்கம் அகில இலங்கை கம்பன் கழக ஸ்தாபித அமைப்பாளர் கம்பவரிதி இ.ஜெயராஜ் ஆகியோர் விமர்சனம் உரைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பதில் உரையினையும் அரசியல் ஆர்வலர் இ.அனோசன் நன்றியுரையினையும் நிகழ்த்தவுள்ளனர்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed