Thu. Sep 17th, 2026

சுபாஸ்கரனின் பயிற்சியில் தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் மிளிரும் ஸ்கந்தா மற்றும் விக்டோரியா கல்லூரிகளின் மாணவர்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மற்றும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவிகள் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.சகானா 2.60 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும்,
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த கு.வைஷ்ணவி 2.60 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். இவர்களுக்கான பயிற்சியை கோலூன்றி பாய்தலில் தேசியத்தில் பல மாணவர்களை மிளிர வைத்துக் கொண்டு இருக்கும் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர் சின்னையா சுபாஸ்கரன் அவர்கள் பயிற்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply