Sun. Sep 15th, 2024

சுதந்திர கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை ஆதரிக்காது , எதிராக போட்டியிடும் எவரையும் ஆதரிக்கும்-நிமால் சிறிபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெறும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பின்பே , எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரகட்சியின் நிலைப்பாடு என்ன என்பது வெளிவரும் என்று சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
இரண்டு தலைவர்களும் திங்கள் இரவு சந்தித்து கொண்டார்கள், மீண்டும் மிக விரைவில் 2ஆம் கட்டமாக சந்திக்கவுள்ளார்கள். இதனால் சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது பற்றி இப்போது என்னால் ஒன்றும் வெளியிடமுடியாது என்றும் அவர் கூறினார். இருந்தபோதிலும், பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்ததாகவும் , மிக விரைவில் இரண்டு கட் சிகளும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிடும் என்று தான் நம்புவதாகவும் தயாசிறி குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடட அவர், சுதந்திர கட் சி அங்கத்தவர்கள் ஒருபோதும் பொது ஜன பெரமுனவில் இணையமாட்டார்கள் என்றும், சுதந்திர கட்சி என்பது தனி ஒருவர் அன்று, பெரும்தொகையான அங்கத்தவர்களை கொண்ட ஒரு பெரிய கட் சி என்றும், சுதந்திர கட்சியின் உதவி தேவையானவர்கள் அந்தக் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுடன் ஒத்துபோகவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இங்கு உரையாற்றிய நிமால் சிறிபால சில்வா கூறியதாவது, சுதந்திர கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்காது என்றும், அவர்களுக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட் டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்