சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று நடை பெறவுள்ளது.
இன்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று அதன் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பொதுஜன முன்னணியுடன் நாளை இடம்பெறும் கூட்டத்தில் பேசப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மேலும் நாளை பொதுஜன முன்னணியுடன் இடம்பெறும் கூட்டத்தில் பங்கேற்பதா இல்லையா என்பது தொடர்பாகவும் இன்று கலந்துரையாடப்படும் என்றும் அதன் செயலாளர் தயாசிறி தெரிவித்தார்