Sun. Oct 6th, 2024

சுதந்திர கட்சியின் சொந்த வேட்பாளர் ஜனாதிபதி தேர்தல் களத்தில் -சுதந்திர கட்சி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி தனது சொந்த வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் வீரகுமாரா திசானநாயக்க நேற்று தெரிவித்தார். மேலும் இதனை கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி. தயசிறி ஜெயசேகர தேர்தல் ஆணையத்திற்கு இதனை தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறினார்

இது தொடர்பாக கருது தெரிவித்த தயாசிறி ஜயசேகர , வேட்பாளர் யார் என்பது குறித்து தாங்கள் இன்னமும் இறுதி செய்யவில்லை என்றும், இது ஒரு முடிவு மட்டுமே என்றும் கூறினார். இந்த முடிவானது சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரியவருகின்றது

இந்த முடிவானது பொதுஜன பெரமுனாவுடனான பேச்சுவார்த்தையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறிய அவர் , அவர்களுடனான பேச்சுவார்த்தை இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை எண்ணூர் கூறினார் முடிவு இலங்கை போடு ஜன பெரமுனா (எஸ்.எல்.பி.பி) உடனான பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருக்குமா என்று கேட்டதற்கு, எம்.பி. ஜெயசேகர, தான் அப்படி நினைக்க மாட்டேன் என்று கூறியதோடு, பேச்சுவார்த்தைகள் இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை என்றும் கூறினார்.
.
கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் சுதந்திர கட்சியும் , பொதுஜன முன்னணியும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்