சுதந்திர கட்சிக்கும் ,பொதுஜன முன்னணிக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல்

சுதந்திர கட்சிக்கும் ,பொதுஜன முன்னணிக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் என்று சுதந்திர கூட்டணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் .
நேற்றய தினம் திஸ்ஸமஹராமா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின்போது ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
பொதுஜன முன்னணியின் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேர்தெடுத்து அறிவித்துள்ளார்கள்.
பொதுஜன முன்னணியுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையை பொறுத்தே அவரை ஆதரிப்பதை இல்லையா என்று முடிவெடுக்கப்படும் .
வெற்றி பெறுவதற்கு சிறந்த ஒரு வேலை திட்டத்தை முன்வைப்பார்களானால் அவர்களுடன் இணைக்கப்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் .
கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமைகளில் இருந்து பார்க்கும்பொழுது , நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை கொண்ட ஒரு தலைவரே முன்னிலைப்படுத்தப்படவேண்டும். இந்த நடவடிக்கை ஒரு நபரை மட்டும் முன்னிறுத்தாமல் வேலைத்திட்டங்களை முன்னிறுத்தியதாக இருக்கவேண்டும் என்று கூறினார். பலமிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டுக்கு அவசியமாகும் நேரும் அவர் குறிப்பிட்டார்