Wed. Sep 18th, 2024

சுதந்திரக் கட்சி ஒழுகாற்று நடவடிக்கைக்கு தயாராகின்றது , சுய விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பி வைப்பு- தயாசிறி

கட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் அங்கத்துவம் பெற்ற 5 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சுதந்திரக் கட்சி ஒழுகாற்று நடவடிக்கைகான கடிதங்களை வழங்கியுள்ளது என்று பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான லட்சுமன் யாபா அபேவர்தன, விஜித் விஜயமுனி சோய்சா, எஸ்.பி. திசாநாயக்க, திலன் பெரேரா மற்றும் ஏ.எச்.எம். பௌஸிக்கு எதிராகவே இந்த ஒழுங்கு நடவடிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களது தரப்பு விளக்கத்தை மேற்கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த விவகாரத்தில் காரணத்தை எடுத்துக்கூற ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் இதற்காக கூடுதல் நேரம் எடுக்க அனுமதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஒரு மாத காலத்திற்குள் இந்த நடைமுறை முடிவடையும் என்றும் கூறினார்

இந்த தேசிய பட்டியல் எம்.பி.க்கள் தேவைப்பட்டால் சட்ட உதவியை நாடமுடியும், இருந்தபோதிலும் , அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் கீழ், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்கமுடியும்.
கட்சியை விட்டு வெளியேறிய இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் தினசரி கடிதங்களை அனுப்பி வந்தனர் என்று ஜெயசேகர குறிப்பிட்டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்