சுதந்திரக் கட்சியும் பொதுஜன முன்னணியும் இன்று சந்தித்து பேசவுள்ளன
இந்த இரு அரசியல் கட்சிகளும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன , இருப்பினும், ஜூன் முதல் இந்த பேச்சுவார்த்தையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது
ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பங்குபற்றும் பிரதிநிதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சுதந்திரக் கட்சி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர, எம்.பி. மஹிந்த அமரவீரா, மற்றும் புதிய தவிசாளர் அழகியவண்ண ஆகியோரும் , பொதுஜன பெரமுனாவின் சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் எம்.பி. டல்லாஸ் அலகாபெருமா ஆகியோர் பங்குபற்றுவார்கள் .
நேற்று (26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இன்றைய கூட்டம் முக்கியமாக ஜனாதிபதி வேட்பாளரை மையமாகக் மட்டுமல்லாமல் , இரு கட்சிகளின் எதிர்காலத் திட்டங்களையும் மையமாகக் கொண்டதாகவும் அமையும்