Mon. Aug 10th, 2026

சுடர் ஒளியின் வெற்றிக் கிண்ணமும் சீருடையும் அறிமுக நிகழ்வு

4வது தடவையாக நடைபெறும் சுடர்ஒளி பிறீமியர் லீக் மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப் போட்டிக்கான வெற்றிக் கிண்ணமும் சீருடை அறிமுக நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் யாழ் பீச் ரெஸ்ரோரன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
ஏற்பாட்டுக் குழு தலைவர் வைத்திய கலாநிதி வே.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக விக்னேஸ்வரா திருமண மண்டப உரிமையாளரும், செலான் வங்கி வடபிராந்திய காரியாலய உத்தியோகத்தருமான வ.பத்மசிறீ, பிமல் பிளான்ரேஷன் நிறுவனத்தின் உதவி சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் புஸ்பவசந்தன் ஆகியோரும்
மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் விளையாட்டு உத்தியோகத்தர்கள் நடுவர்கள் வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed