Sun. Apr 12th, 2026

சுகாதார மேம்பாட்டு மதிப்பீட்டில் பாலிநகர் தமிழழகன் முன்பள்ளி முதலிடம்

முன்பள்ளிகளுக்கு இடையிலான சுகாதார மேம்பாட்டு மதிப்பீட்டில் பாலிநகர் தமிழழகன் முன்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முதலிடத்தை பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
தேசிய ரீதியில் நடாத்தப்படும் முன்பள்ளி  சுகாதார  மேம்பாட்டு  நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில்  நடாத்தப்பட்ட இறுதி மதிப்பீட்டில் பாலிநகர்   தமிழழகன்  முன்பள்ளி  முதலிடத்தைப் பெற்று மாவட்ட நிலை மதிப்பீட்டுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் பாலிநகர்  புனித அந்தோனியார் முன்பள்ளி இரண்டாமிடத்தையும் வன்னி விளாங்குளம்  அம்மன் முன்பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed