சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வியாபார நிலையங்களுக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை II பகுதிகளில் சுகாதார நடைமுறைகளான மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, காலாவதி திகதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டியமை, முகச்சவரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவினை கையாண்டமை, உணவு வளவுப் பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவினை உற்பத்தி செய்தமை, எலி எச்சங்களுடன் வியாபார நிலையத்தை பேணியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 03 வியாபார நிலையங்களிற்கு எதிராக பருத்தித்துறை II பொதுச்சுகாதார பரிசோதகர் இ.கமல்குமார் அவர்களால் இன்றைய தினம் (2026.03.13) தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினமே விசாரணையிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது 03 வியாபார நிலையங்களின் உரிமையாளர்களும் குற்றத்தினை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 3 வியாபார நிலையங்களிற்கும் மொத்தமாக 100,000 தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.