சுகாதார துறையினருக்கு கொள்கலனில் எரிபொருள் வழங்கப்பட்ட காரணம்
சுகாதார துறையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எரிபொருளே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது. இதில் சுகாதார பணியாளர்களுக்கு மோட்டார் சையிக்கிளுக்கு எரிபொருள் நிரப்பி பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்ட கொள்கலன்களிலும் எரிபொருள் நிரப்பப்பட்டது. இதனை அவதானித்த பொதுமக்கள் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் சுகாதார பணியாளர்களுக்கு மோட்டார் சையிக்கிளுக்கு 3000/=வும் காருக்கு 7000/=வும் வழங்குமாறும் சுற்றுநிருபங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சுகாதார பணியாளர்கள் சிலர் பாவிக்கும் மோட்டார் சையிக்கிளில் உள்ள எரிபொருள் நிரப்பு கொள்கலன் சிறியதாக உள்ளது. அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் எரிபொருளும் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களின் அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு பொலீஸ், இராணுவத்தினர், பிரதேச செயலாளர் போன்றோரின் மேற்பார்வையில் ஒவ்வொருக்கும் ஒதுக்கப்பட்ட எரிபொருளே வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.