Fri. Jan 17th, 2025

சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி நசார் மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்களை புதைப்பதில் மீண்டும் சிக்கல்

சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி நசார் மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்களை மீண்டும் புதைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் வழங்குவது தொடர்பாக எந்தவித இணைக்கப்படும் எட்டபடவில்லை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சினைகள் எதுவுமின்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்க அதிபர் ஊடாக மேற்கொள்ளுமாறு நேற்று முன்தினம் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார் .,

இது குறித்து நேற்றைய தினம் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், உடற்பாகங்களை மாவட்ட எல்லைக்குள் புதைப்பதற்காக இடத்தை வழங்குவதற்கு எந்த தரப்பினரும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று கூறினார் .இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் , அதற்கான இடமொன்றை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றார். இதனால் நீதிமன்றத்தை நாடுவது இது தொடர்பில் ஆலோசித்து வருவதாக குறிப்பிடடார்

 

இதனிடையே ஆரையம்பதி பிரதேசத்தில் குறித்த தீவிரவாதியின் சடலத்தினை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு மக்களோ அரசியல் தலைமைகளோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அதற்காக ஒரு கூட்டமும் இங்கு தேவையில்லை என பொதுமக்களால் பிரதேச செயலாளருக்கு சுட்டி காட்டப்பட்டதற்கு அமைய மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் அதனை அடக்கம் செய்வது இல்லை என மக்களால் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்ப்பட்டு கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது .

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்