உயிா்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீள் கட்டுமான பணிகளை நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா நோில் பாா்வையிட்டுள்ளாா்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (13) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இவ் விஜயத்தின் போது குறித்த மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறியவுள்ளதுடன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்

மற்றும் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில்  மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு

இலக்கான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு நேரில் சென்று பாதிப்புக்களை பார்வையிட்டதுடன்  தாக்குதலின் பின்னரான கட்டுமாண பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் தேவாலய நிர்வாகத்தினரையும் சந்தித்து தாக்குதலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது