Sat. Jan 18th, 2025

சீதுவையில் விபச்சார விடுதி முற்றுகை , இளம்பெண் கைது

ஆயுர்வேத நிலையம் என்னும் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று கட்டுநாயக்க , சீதுவையில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டபோது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்முற்றுகையானது நேற்றையதினம் இரவும 8 .30 மணியளவில் நடைபெற்றதாக சீதுவ பொலிசார் தெரிவித்தனர்
இரகசிய தகவல் ஒன்றையடுத்து நீர்கொழும்பு நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்படட இந்த முற்றுகையின் போது கலேவெல பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம் பெனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட பெண் , விடுதியின் முகாமையாளராக செயற்பட்டுள்ளதுடன் , விபச்சார நடவைடிக்கையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்