Sun. Sep 15th, 2024

சிாித்த முகத்துடன் எழுக தமிழ் நிகழ்வில் நா.உ. சி.சிறீதரன் என்ன சொல்ல வருகிறாா்?

தமிழ்தேசிய கூட்டமைப்பு எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்வது தொடா்பாக உத்தியோகபூா்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாத நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன்

எழுக தமிழ் மக்கள் பேரணியில் தன்னுடைய ஆதரவாளா்கள் சகிதம் கலந்து கொண்டிருக்கின்றாா். தமிழ் மக்களுடைய அரசியல் உாிமை பிரச்சினை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் உள்ளடங்கலான

7 அம்ச கோாிக் கையினை முன்வைத்து தமிழ் மக்கள் பேரவையினால் “எழுக தமிழ்” மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வு இன்று யாழ்.முற்ற வெளி மைதானத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த நிகழ்வு தொடா்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தனுடன் தமிழ் மக்கள் பேரவை சாா்பில் பேச ப்பட்டபோது எழுக தமிழுக்கு தாம் எதிரானவா்கள் அல்ல.

என தெளிவாக கூறிய இரா.சம்மந்தன் நிகழ்வில் கலந்து கொள் வது தொடா்பாக எந்தவொரு விடயத்தையும் பகிரங்கமாக தொிவித்திருக்கவில்லை.

இதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரை பேரணியி ல் பாா்க்க முடியும் என தாம் நம்புவதாக

தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவா் க.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தாா். எனினும் இரா.சம்மந்தன் கலந்து கொள்ளாத நிலையில்இ

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் தனது ஆதரவாளா்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினா்கள் சிலருடன் கலந்து கொண்டுள்ளாா்.

எழுக தமிழ் கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வராவிட்டாலும் பேரணியில் மக்களுடன் கலந்து கொண்டிருந்தாா்.

தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காத போதும்இ அனைத்துக் கட்சிகளையும்இ அமைப்புக ளையும்இ அரசியல் சார்பின்றி இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு

தமிழ் மக்கள் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட் டது. அதற்கமைய பல அமைப்புக்கள்இ சில கட்சிகள் கலந்து கொண்டிருந்தன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்