சிவகார்த்திகேயனுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அணு இம்மானுவல்
நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக “கானா” திரைப்பட நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் துப்பறிவாளன் திரைப்பட நாயகி அணு இம்மானுவல் நாயகிகள் இருவரும் ஜோடியாக இணைந்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் “கேடி பிள்ளை கில்லாடி ரங்கா ” திரைப்படத்திற்கு பின்னர் இயக்குநர் பாண்டியராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் மீண்டும் தமது இரண்டாவது படத்திற்காக இணைந்துள்ளனர். இத் திரைப்படத்தை கலாநிதி மாறன் தயாரிக்கின்றார்.