Mon. Dec 9th, 2024

சில்லறைத்தனமாக நடக்கும் காணாமல் போனோர் அலுவலகம்!! -சாடுகிறார் க.வி.விக்னேஸ்வரன்-

யாழ்ப்பாணத்தில் இரகசியமாக திறக்கப்பட்டுள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆயுள் மக்கள் கொடுக்கும் ஆதரவிலேயே தங்கியுள்ளது என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டொருக்கான அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேளையில் மக்களுக்கு தெரியாது திறந்து வைக்கப்படடமை தொடர்பாக நேற்று முன் தினம் ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்களுக்கு தெரியாது காணாமல் ஆக்கப்பட்டொருக்கான பணியகத்தை இரகசியமாக திறந்து விட்டு சென்றிருக்கின்றார்கள் என்றால் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது மிகவும் கேள்விக் குறியாக உள்ளது. இந்த அலுவலகம் அமைக்க காணாமல் ஆக்கப்படட உறவினர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.நான் கூட இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன்.

இந்த அலுவலகத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. இந்த பணியகத்தினர் ஒருவரை குற்றவாளி என இனம் கண்டால் கூட அவர்கள் சம்மபந்தமாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.

இவர்களினால் செய்யக் கூடிய ஒரே ஒரு பணியாக நீதிமனரில் பாரப்படுத்தக் கூடிய பணியை மட்டுமே செய்யக் கூடியதாக இருக்கும். நீதிமனரில் வழக்குகளுக்கு சென்றால் தீர்வை பெற 5 வருடங்கள் அல்லது அதற்கும் அதிக வருடங்கள் எடுக்கலாம். ஆகவே காணாமல் ஆக்கப்படடமை விடயத்தில் ஓர் ஸ்திரமான தீர்வு கிடைக்க கூடாது என்றே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் நானும் இங்குள்ள பல தரப்பினரும் காணாமல் ஆக்கப்பட்டொருக்கான பணியகத்தின் ஊடாக பாதிக்கப்படடவர்களுக்கு எவ்வித அனுகூலங்களும் கிடைக்கப் போவதில்லை என்பதை எடுத்துக் கூறி வருகின்றோம்.

எனவே மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சில்லறைத்தனமாக திறந்து வைக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு எமது மக்கள் எந்தளவு ஆதரவு கொடுக்கின்றனர் என்பதிலேயே அலுவலகத்தின் ஆயுள் இருக்கின்றது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்