Thu. Jan 23rd, 2025

சிறைக்குள் இருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர் ஆவார்.

நேற்று முன்தினம் வாழைச்சேனையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இம்மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய வாழைச்சேனை பொலிஸாரினால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

இதன்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்