சிறுவா் பிக்குகள் மீது மிருகத்தனமான தாக்குதல், சீ..சி.ரீ.வி உதவியுடன் காடையன் கைது.
அனுராதபுரம்- ஹொரவபொத்தான பகுதியில் சிறுவா் பிக்குகள் மீது மூா்க்கத்தனமான தாக்குதலை நடாத்திய நபா் சீ.சீ.ரி.வி கமராவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றாா்.
உட்டியா சமிந்தா கலபோடா என்ற அழைக்கப்படும் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு பிக்கு மாணவர்களையும் தாக்கும் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில்
வைரலாக பரவிய காணொளியினை அடிப்படையாக கொண்டு முன்னெடுத்த விசாரணைகளின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.