சிறுவர்களுக்கான நடமாடும் சேவை

யாழ் மாவட்டத்தில் இதுவரை பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவை நாளை செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
2024 ஆண்டிற்கான சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது 01.10.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 04.00 மணி வரை மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
சிறுவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை பதிவு செய்வதற்காக உரிய ஆவணங்களுடன் தத்தமது கிராம அலுவலகருடன் தொடர்பு கொண்டு பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.