Mon. Aug 10th, 2026

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற முதியவர் கைது

நேற்று காலை கிரான்குளம் கடற்கரைக்கு குறித்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டபொழுது , அந்த பகுதியிலிருந்த சிலரால் குறித்த சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பேரப்பிள்ளை உறவு முறையான குறித்த சிறுமியையே சந்தேகநபர் கடற்கரைக்கு அழைத்துச்சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சந்தேகநபர் பொதுமக்களால் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed