Thu. Mar 20th, 2025

சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைக்க JVP தயார் ?

ஜேவிபி கடசியானது தனியாக ஜனாதிபதி வேட்பாளரை கடந்த மாதம் காலிமுகத்திடலில் வைத்து அறிவித்துள்ளது. இந்தநிலையில் அவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜெயசேகர நேற்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருது தெரிவிக்கும் பொழுது அதில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை என்று கூறினார்.
சுதந்திர கட்சிக்கு உண்மையில் விருப்பம் இருக்கும் என்றால் , அதனுடன் கூட்டு சேர்வது குறித்து தங்கள் கட்சிக்குள் ஆலோசித்த பின்னர் அவர்களுடன் பேச தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 7 சுற்று பேச்சுவார்த்தை பொதுஜன முன்னணியுடன் முடிந்த நிலையில், ஜனாதிபதியை கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச சந்தித்திருந்ததும் , பின்னர் கோத்தபாய ராஜபக்ச சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை சுமுகமாக இடப்பெற்றதாகவும் விரைவில் கூட்டணி அமையும் என்றும் இருகட்சிகளும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்