Mon. Feb 10th, 2025

சிறிதரன் எம்.பியின் வீடு படைத்தரப்பால் முற்றுகை!! -வெடிகுண்டு இருப்பதாக தகவல்-

கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டிற்கு முன்பாக தற்போது பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் குண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள படைத்தரப்பினர், தேடுதல் நடத்துவதற்காகவே அங்கு நிலை கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இத் தேடுதல் நடவடிக்கைக்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்