Sun. Nov 3rd, 2024

சிறப்பு நாடாளுமன்ற தேர்வுக் குழு முன் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு நாடாளுமன்ற தேர்வுக் குழு முன் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தேர்வு குழுவின் தலைவரும் துணை சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி தெரிவித்தார்

அந்தக் கடிததில் தெரிவுக்குழு முன்தோன்றுவதற்கு வசதியான நேரத்தை எங்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தோம் .
கு ஜனாதிபதி சிரிசேனா, தகுந்த தேதியுடன் வழங்கினால் அவரை வரவழைத்து எங்களால் விசாரணை செய்ய முடியும் என்று நம்புகிறோம்

குமாரசிரி மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்வு குழுவின் முன் ஆஜராகாவிட்டால் நங்கள் இறுதி அறிக்கையை தயார் செய்து பாராளுமன்றத்தில் சமர்பிப்போம்.
இருந்தபோதிலும் , சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராக மாட்டேன் என்று ஜனாதிபதி முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த வாரங்களில் பிரதமர் உட்பட பல அமைச்சர்கள் தெரிவுக்குழுவில் முன்தோன்றி வாக்குமூலங்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில், தேர்வுக் குழுவின் காலம் முந்தைய ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்