சிறப்புற நடைபெற்ற மன்/தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் மரதன் ஓட்டம்

மன்/தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான மரதன் ஓட்டம் சிறப்புற நடைபெற்றது. இம்மரதன் ஓட்டம் இலுப்பக்கடவை விசேட அதிரடி முகாம் முன்றலில் இருந்து ஆரம்பமாகி மன்/தேவன்பிட்டி றோ க த மகாவித்தியாலயம் வரை நடைபெற்றது.
வித்தியாலய முதல்வர்
வை.விஜிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழன் அறக்கட்டளை பணிப்பாளர்
இ ஸ்ரீறஞ்சித்குமார் கலந்து கொண்டார்.

இதில் ஆண்கள் பிரிவில் ம.யாழ்சன் முநலாமிடத்தையும், ஜெ.பண்பழகு இரண்டாமிடத்தையும், ம.சமர்குட்டி மூன்றாமிடத்தையும் பெற்றனர் .

பெண்கள் பிரிவில் அ. அலைக்சினி முதலாம் இடத்தையும் இ.ஜீவரேனுஜா இரண்டாமிடத்தையும், ஜெ. ஜென்சிகா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.